Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி - மு.க.ஸ்டாலின்

Ilavarasan
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (13:12 IST)
தமிழ்நாட்டில் பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 
 
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- 
 
கேள்வி:- பாஜக தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறப்பட்டுள்ளதே?. 
 
பதில்:- அதனால்தான் மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 
 
கேள்வி:- தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இல்லையே?. 
 
பதில்:- தமிழகத்தில் ‘மெகா’ கூட்டணியை அமைத்துவிட்டதாக பாஜக கூறிவருகிறது. இது சந்தர்ப்பவாத கூட்டணி. 
 
கேள்வி:- முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜகவை பற்றி விமர்சனம் செய்வதில்லையே?. 
 
பதில்:- இதையேத்தான் நானும் தேர்தல் பிரசாரத்தின்போது கேட்டுவருகிறேன். இதுவரை அவர் பதில் அளிக்கவில்லை. 
 
கேள்வி:- திமுக நீண்டகாலமாக வலியுறுத்தி வரும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லையே?. 
 
பதில்:- பாஜக மதவாத கட்சி என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் படம் இடம்பெற்றுள்ளது மேலும் அதை தெளிவுபடுத்தியுள்ளது. 
 
கேள்வி:- வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறாரே?. 
 
பதில்:- முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆடம்பர பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
கேள்வி:- தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?. 
 
பதில்:- அதற்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
கேள்வி:- பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து எதுவும் இல்லையே?. 
 
பதில்:- இதை பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்கள் நலன் பற்றி பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

Show comments