Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை‌- வாரணாசி‌க்கு புதிய வாராந்திர ரயில் இய‌க்க‌ம்

Webdunia
சென்னை எழும்ப ூ‌‌‌ர்- வாரணாசி இடையே புதிய வாராந்திர ‌ விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் என்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே அறிவ ி‌த்து‌ள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், சென்னை எழும்பூர்- வாரணாசி- சென்னை எழும்பூர் இடையே புதிய வாராந்திர ‌ விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்- வாரணாசி (வண்டி எண்: 4259) வாராந்திர ‌ விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரு‌ம் 12ஆ‌‌ம் தேதி முதல் வியாழக்கிழமைதோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும். சனிக்கிழமை காலை 4.50 மணிக்கு வாரணாசி போய்ச் சேரும்.

மறுமார்க்கத்தில், வாரணாசி- சென்னை எழும்பூர் (வண்டி எண்: 4260) வாராந்திர ‌ விரைவு ரயில் வாரணாசியில் இருந்து ஞாயிறுதோறும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயிலில், ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி.பெட்டி, ஒரு மூன்று அடுக்கு ஏ.சி.பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகள் உள்ளன.

கூடூர், விஜயவாடா, நாக்பூர், கிட்டார்சி, ஜெபல்பூர், அலகாபாத் வழியாக இந்த ரயில் செல்லும். முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Show comments