Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி மட்டுமே இடஒதுக்கீட்டின் பாதுகாவலராக விழங்குகிறார் - தொல்.திருமாவளவன் எம்.பி

Ilavarasan
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (18:36 IST)
. தலைவர் கலைஞர் மட்டும்தான் இட ஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார் என்று திருமாவளவன் பேசினார்.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் ஜெயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
 
தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டிபஜார், அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், நத்தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, மற்றும் தா.பழூர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் ஓட்டு கேட்டார். சிலால் என்னுமிடத்தில் பிரசாரத்தை தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது:–
 
இந்த தேர்தல் மதவாதத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர், தலைவர் கலைஞர் மதவாதத்திலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற போராடி கொண்டு இருக்கிறார். மதவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது, ஆட்சி சிக்கிக் கொள்ளக்கூடாது. நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் சமூக நீதியை காப்பாற்ற வேண்டுமானால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை காப்பாற்ற வேண்டுமானால், இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க வேண்டுமானால் மதவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு. 
 
அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அடுத்த பிரதமரை தீர்மானிக்க வேண்டும். அவர் அடுத்த பிரதமரை தீர்மானிக்க வேண்டுமானால் அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும். அவருடைய கரத்தை வலுப்படுத்துவதற்கு நீங்கள் மோதிரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
 
தலைவர் கலைஞர் மட்டும்தான் இட ஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார் என்று திருமாவளவன் பேசினார்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments