Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது??

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (08:47 IST)
அதிமுகவின் ஆட்சியை கவிழ்க்க ஒரு சில வழிகள் மட்டுமே உள்ளது இதில் திமுக தலைமை எதை தேர்வு செய்யும் என்பது விடை தெரியா கேள்வியாக உள்ளது. 
 
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி விரைவில் கவிழும், தேர்தலை சந்திக்காமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என நம்பிக்கையுடன் கூறி வருகிறார். ஸ்டாலினின் இந்த கூற்று சாத்தியமாக ஒரு சில வழிகள் மட்டுமே உள்ளது. அவை... 
 
1. அதிமுக எம்எல்ஏக்களை பேரம் பேசி திமுகவின் பக்கம் இழுக்க வேண்டும். 
2. அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் தாமாக முன்வந்து திமுகவுக்கு ஆதரவு தர தயாராகி இருக்க வேண்டும். 
3. அதிமுகவின் தயவு தற்போது பாஜகவுக்கு தேவைப்படாது என்பதால், திமுக் - பாஜக ஏதேனும் கணக்கு போடலாம். 
4. ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சியை கவிக்க வேண்டும். 
ஆனால், இவை அனைத்திற்கும் உதவ போவது தினகரன் தரப்பா? அதிமுகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்களா? பேரத்தில் திமுக பக்கம் சாய்ந்த எம்.எல்.ஏ-க்களா? 
 
இதை அனைத்தையும் ஸ்டாலின் சிந்தித்து எந்த குளறுபடியும் இல்லாமல் செயல்படுத்துவாரேயானால் அதிமுக ஆட்சி நிச்சயம் கவிழும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments