தேவதைகளின் தேவதை

தபு சங்கர்
சனி, 3 அக்டோபர் 2015 (16:49 IST)
தேவதைகளின் தேவதை. 


 
 
 


எதற்காக 
நீ கஷ்டப்பட்டுக் 
கோலம் போடுகிறாய்.
பேசாமல் 
வாசலிலேயே 
சிறுது நேரம் உட்கார்ந்திரு 
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும் 
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான் 
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை 
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல 
நீ ஒவ்வொரு முறையும் 
சரிசெய்கிறாய் 
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால் 
உயிர் உள்ள கொடியும் 
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால் 
உயிரற்ற கொடியும் 
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த 
மௌன அஞ்சலியைப் 
பார்த்ததும்.....
எனக்கும் 
செத்துவிடத் தோன்றியது

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன?... இரவில் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!...

Show comments