Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் உழைப்பின் வேர்வை!

Webdunia
புதன், 13 ஜனவரி 2016 (17:03 IST)
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் உழைப்பின் வேர்வை!
 
 
தமிழ்நிலம்
மகிழ்ச்சி பொங்க
 
சேற்றில் குளித்த தேகத்துடன்
பாதமும், கைகளும் பட்டு
செழித்த விளைநிலம்
 
குளத்து நீரையும்
ஆற்றுநீரையும் குடித்து
பச்சை மிளகாயும்
வெங்காயமும் கடித்து
கேப்பங் கூழை உண்டு
பெருக்கிய தானியங்கள்
விஷப்பூச்சிகளிலும்


 
விஷ முட்களிலும்
சிக்கி தாக்குண்டு
விளைந்த காய்கனிகள்
 
வலிகளை
விளைச்சலில் மறந்துவிட்டு
மற்றவரின்
வாழ்வாதாரத்திற்காய்ப்
பாடுபடும் வர்க்கம்
 
உழைப்பின் முகத்தை
உழவனிடம் பார்க்கலாம்
அதிகாலையின் சுறுசுறுப்பை
விவசாயிடம் கேட்கலாம்
 
வறுமையை மூடி தாழிடவும்
பசிக்கு உணவளிக்கவும்
இருக்கும் ஒரே திறவுகோல்
 
தமிழனின் ஒவ்வொரு
சோற்று பருக்கையிலும்
உழைப்பின் வேர்வை
உள்ளதென்பதை
மறுக்க முடியுமா?
 
- கோபால்தாசன்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments