Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (17:52 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.


 


வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தை சேர்ந்தவர்களாலும் நன்மை உண்டாகும். தைரியத்தையும், வலிமையையும் தருவார். ஆனால் உடல் நலக் குறைவு ஏற்படும். கார, அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். 
 
வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். வர வேண்டிய தொகைக் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். 
 
அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். 
 
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. 
 
கலைத்துறையினர்களே! கௌரவிக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். வி. ஐ. பிகளால் இனம் கண்டறியப்படும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 17
அதிஷ்ட எண்கள்: 4, 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, பழுப்பு 
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments