ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (14:58 IST)
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

எந்த காரியத்திலும் திட்டமிட்டு ஜெயிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். அரசியல்துறையினர் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments