Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான கிராமத்து கோழி ரசம் செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
நாட்டு கோழி - அரை கிலோ 
சின்ன வெங்காயம் - 15 
சீரகம் - 1 ஸ்பூன் 
மிளகு - 2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
பட்டை, லவங்கம் - தலா 1 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
தனியாத்தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன் 
கருவேப்பிலை, மல்லி இலை - தேவையான அளவு 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை:
 
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 
பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். பொடித்த மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக  விடவும். 
 
இறக்கி வைத்து கருவேப்பிலை, மல்லி இலை தூவி பரிமாறவும்.நாட்டு கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம். சுவையான கிராமத்து கோழி ரசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments