Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
குடைமிளகாய் - 1 (பெரியது)
கடலை மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கேரட் - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
 
குடைமிளகாய், விதையை நீக்கி விட்டு வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். மீதமாகும் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதியை பொடியாக வெட்டவும்.  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
 
மாவில் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைக்கவும். (பஜ்ஜி மாவு பதமாக) கரைத்து கொள்ளவும். தோசைக்கல்லில்  எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும்.
 
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும். சுவையான  கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments