மிளகு நண்டு சூப் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
பெரிய நண்டு - 3
 
செய்முறை : 
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
 
கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பின்பு பரிமாற வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்.. பயனுள்ள தகவல்..!

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் உணவு முறைகள்.. பயனுள்ள தகவல்..!

சரும அழகுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களால் ஆபத்து.. எச்சரிக்கை தேவை..!

பிறரின் அழுத்தத்திற்காக குழந்தை பெற வேண்டாம்: தம்பதிகளுக்கான முக்கிய ஆலோசனைகள்!

உடல் எடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பு உண்டா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments