மட்டன் போண்டா

Webdunia
அசைவ பிரியர்களுக்கேற்ற மட்டன் போண்டா, இவை சுவையாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.


 

 
தேவையான பொருட்கள்:
 
உளுந்துமாவு- 100 கிராம்
அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
அவித்து அரைத்த கறி - 2 கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
 
தயார் செய்து கொள்ள வேண்டியை:
 
உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து மிருதுவான மாவாக அரைத்து கொள்ளவும்.
 
எலும்புகள் நீக்கப்பட்ட மட்டனை வாங்கி, வேகவத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
 
செய்முறை:
 
கெட்டியாக அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, அரைத்த கறி, இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமாக காய்ந்ததும் பிசைந்த மட்டன் கலவையை உருண்டையாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கிளறி விட்டு பொன்னிறமாக பொரிக்கவும். 
 
மனமுள்ள, ருசியான மட்டன் போண்டாவை தேனீருடனும் உணவுடனும் ரசித்து உண்ணலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

Show comments