Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மட்டன் ரசம் செய்ய....!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ஆட்டு எலும்பு - 250 கிராம்
எலுமிச்சை பழம் - 1
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டுப் பல் - 4
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை:
 
எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும்.
 
கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு மிளகுத் தூள், காஇய்ந்த, சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். எழும்புத் துண்டு  வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும். பின்பு அதனுடன்  எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கலக்கி பரிமாறலாம். தேவைப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொள்ளலாம். சுவையான மட்டன் ரசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments