மட்டன் உருளைக் கிழங்கு போண்டா செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
கொத்து கறி - கால்  கிலோ
காய்ந்த மிளகாய் - 5 
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
தனியா - 3 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
பச்சை மிளகாய் 1
உருளைக் கிழங்கு - அரை கிலோ
நறுக்கிய வெங்காயம்  - 2
முட்டை - 2
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 
 
காய்ந்த மிளகாய், விட்டுபட்டை,கிராம்பு, சோம்பு, தனியா, சீரகம் இவற்றை வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும். கொத்துகறியில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி, சேர்த்து நன்கு வதக்கி அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.
 
கடாயில் நெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்து கறியையும் கொட்டி கிளறி அதனுடன் வேகவைத்து  உருளைகிழங்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து சின்ன உருண்டைகளாக செய்யவும்.
 
ஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளை கருவை மட்டும் தனியே எடுத்து அடித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளை கருவில் முக்கி, பொரித்து எடுத்தால் மட்டன் உருளைக்கிழங்கு போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments