Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பாப்கார்ன் சிக்கன் செய்ய...!

Webdunia
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சுவையான, மொறுமொறு சிக்கன் பாப்கார்ன் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்.
 
தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - கால் கிலோ
மிளகுப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி - தேவைக்கு
சில்லி மற்றும் கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் - தேவைக்கு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மைதா மாவு - கைப்பிடியளவு
காரன் மாவு - கைப்பிடியளவு

செய்முறை:
 
எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் சோளமாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது  உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும். பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.
 
பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும். பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும். பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும். பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து  எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments