Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான மட்டன் மசாலா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மட்டன் - 750 கிராம் 
பெரிய வெங்காயம் - 5 
தக்காளி - 3
பூண்டு பல் - 6 
இஞ்சி துண்டு - 2 
தயிர் - அரை கப் 
எலுமிச்சம் பழம் - பாதியளவு
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 2
கிராம்பு - 4
துண்டு பட்டை - 1
கிரீன் சில்லி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
மஞ்சள் தூள் - அரை மேஜைக்கரண்டி 
மல்லி தூள் (தனியா) - 2 மேஜைக்கரண்டி 
கரம் மசாலா - 1 மேஜைக்கரண்டி 
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
நெய் - 3 மேஜைக்கரண்டி 
மிளகாய் தூள் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 
மட்டன் மசாலா - சிறிதளவு 

செய்முறை:
 
முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில்  வைத்து பின்பு மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 
மட்டனை போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை  நம் கைகளின் மூலம் நன்கு கலந்து விடவும். பின்பு அதில் அரை கப் அளவு தயிரை ஊற்றி அதை நன்கு கலந்து ஊற விடவும். மட்டன் ஊறுவதற்குள், ஒரு மிக்ஸி  ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சை மிளகாயை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
 
அடுத்து ஒரு கடாயில் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து  ஏலக்காய், பிரியாணி இலை, பட்டை, மற்றும் கிராம்பு போட்டு பிறகு வெங்காயம் சிறிது பொன்னிறமாகும் வரை  அதை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சில்லி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
 
பிறகு மட்டனை சேர்த்து அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை நன்கு கலந்து வேகவிடவும். பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள் (தனியா), அவரவர்  விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை வேகவிடவும். 
 
20 நிமிடத்திற்கு பிறகு தக்காளி பேஸ்ட்டை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 வேகவிடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி சேர்த்து 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும். சுவையான மட்டன்  மசாலா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments