Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சிக்கன் சூப் செய்வது எவ்வாறு....?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோழிக்கறி (எலும்புடன்) - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1  துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 /2  தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
 
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், சின்ன  வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
 
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக்  கொள்ளவும்.
 
அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும்  வரை வேக விடவும். பின்பு இநத் சிக்கன் சூப்பில் கொத்தமல்லி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும். சுவையான சிக்கன் சூப் தயார்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments