Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான சுவையில் சிக்கன் சமோசா செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/4 கிலோ (எலும்பு நீக்கியது)
கொத்தமல்லி தழை - சிரிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு  
மைதா - 3 கப்
உப்பு - தேவையான அளவு  
பச்சை மிளகாய் - 4  
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வேகவைத்த பட்டாணி - ½ கப்
பெரிய வெங்காயம் - 1

செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் சிக்கனை நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். இப்பொழுது வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்  கொள்ளவும்.
 
ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். பின்னர் பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், மல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 
மாவை சிறு சிறு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி தேய்க்கும் பலகையில் சிறிது மைதா மாவு தூவி மாவை வட்டமாக பரத்தவும். பின்னர் ஒரு கத்தி கொண்டு அதனை அரை வட்டமாக வெட்டி அதில் இன்னும் கூட தேவையான அளவு மைதா மாவை தூவி நீள வாக்கில் ரிப்பன் போல நன்கு  தேய்க்கவும்.
 
இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும். இப்போது சப்பாத்திக் கல்லை அடுப்பில் வைத்து தேய்த்த மாவை அதிகம் வாட்டாமல் நொடியில் வாட்டி எடுத்துக் கொள்ளவும். அப்போது தான் மொறுமொறுப்பாக சுருட்ட வரும்.
 
பின் அதனை சமோசா வடிவில் மடித்து அதில் சிறிது மசாலாவை வைத்து ஒட்டி விடவும். சமோசாக்களை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான  சிக்கன் சமோசா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments