Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் பெப்பர் ப்ரை மசாலா செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
மிளகு - 10
மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வினிகர், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றம் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரைமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
 
பிறகு அதில் மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை வாணலியில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
 
அடுத்து, அதனை மூடி வைத்து, சிக்கனை வேக வைக்கவேண்டும். சிக்கனானது நன்கு வெந்துவிட்டால், அதனை இறக்கினால், சிக்கன் பெப்பர் ப்ரை மசாலா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments