Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய தெரியுமா....?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ஆட்டு ஈரல் - 1/2 கிலோ
பெரியவெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 2
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிமசலாதூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணய் - 2 ஸ்பூன்

 
செய்முறை:
 
ஈரலை சுத்தம்செய்து சிறிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாயை இரண்டாக  நறுக்கி வைக்கவும்.
 
வாணலியில் எண்ணய் ஊற்றி வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் ஈரலை போட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.
 
மஞ்சள்தூள், கறிமசால்தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும். சுவையான ஈரல் பிரட்டல் தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments