Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் ஊறுகாய் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மீன் - 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி 
வெந்தய பொடி - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
வினிகர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு 
கடுகு - 1 மேஜைக்கரண்டி 
கறிவேப்பில்லை - சிறிது 
நல்லெண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல்  மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற  வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு பொன்  நிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
  
மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி  வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி  அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
 
5 நிமிடம் ஆனதும் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சுவையான மீன் ஊறுகாய் தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments