Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவாட்டுக் குழம்பு

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (10:06 IST)
தேவையான பொருட்கள்:
 
புளி-1 எலுமிச்சை அளவு
100 கிராம் மொச்சைக் கொட்டை-பச்சைப் பயிறு 
கத்தரிக்காய்-5 
வெங்காயம்-100 கிராம்
தக்காளி-100 கிராம்
கருவாடு-100 கிராம்
குழம்புப் பொடி-4 ஸ்பூன்
கடுகு-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-6
வெந்தயம்-1/2 டீஸ்பூன்
பெருங்காயம்-1 டீஸ்பூன்
எண்ணெய்-1/2 கப்
 
செய்முறை:
 
ஒரு கனமான வாணலியில், எண்ணெயை காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பு சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும். 
 
பின்னர் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கிய பின், கத்தரிக்காய் மொச்சைக் கொட்டையையும் போட்டு வதக்கவும். பின் புளியையும் கரைத்து விட்டு, உப்பு, குழம்புப் பொடி போட்டுக் கொதிக்க விடவும். 
 
தளதளவென்று கொதி வந்தவுடன் நன்றாகக் கழுவிய கருவாட்டையும் போட்டுக் கொதிக்கவிட்டுப் பின் நன்றாக ஒரு சேர கொதித்தவுடன் ருசியாக பரிமாறவும்.

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

Show comments