Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2014 (19:26 IST)
7 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு பேரறிவாளன் தாயார் முதல்வரை சந்தித்து நன்றி கூறினார்.
FILE

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன், பேரறிவாளன் ,முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுக்கு முழுஅதிகாரம் அளித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டார். மேலும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள 7 பேரின் உறவினர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 7 பேரின் விடுதலையால் மிகவும் சந்தோஷமடைந்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது: பாகிஸ்தான் பெயரில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவுக்கு இஸ்ரேல் மட்டும்தான் ஆதரவு.. ஆனா எங்களுக்கு! - பெருமை பீற்றிய பாக். அமைச்சர்!

போர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? மத்திய அரசு அறிவுரை..!

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

Show comments