Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை ; ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பாராட்டு

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2014 (15:50 IST)
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஜெயலலிதாவிற்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
FILE

திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-

கேள்வி:- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்குத் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

கேள்வி:- தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாக கருதலாமா?

பதில்:- இது துரித முடிவு அல்ல. 2011ஆம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்த போது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

கேள்வி:- தமிழக அரசே விடுவித்திருக்கலாமே; மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

பதில்:- அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்களானால், இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!

கேள்வி:- கால தாமதம் ஏற்பட்டதற்காக, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறதே?

பதில்:- அதைப்பற்றி யாரும் எங்களிடம் பேசவில்லை. அதனால் நாங்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை. அப்படியொரு கோரிக்கை வைக்கப்பட்டால் அது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

Show comments