Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை நீக்கியது வருத்தம் அளிக்க்கிறது - மு.க.அழகிரி

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2014 (14:27 IST)
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எம்.பி. பேசியதாவது:-
FILE

திமுக தொண்டர்கள் கட்சியை நேசிப்பதுபோல் என்னையும் நேசிக்கின்றனர். கட்சியில் தவறு செய்யாதவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது புரியவில்லை. யாரோ போஸ்டர் ஒட்டினார்கள் என்பதற்காக கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கியது வருத்தம் அளிக்கும் செயலாகும்.

இதனை தலைமையிடம் நியாயம் கேட்பதற்காக சென்றேன். அதற்காக என்னையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து விட்டார்கள். தனியார் தொலைக்காட்சியில் நான் பேட்டி கொடுப்பதாக போஸ்டர் ஒட்டியவர்களையும் நீக்கி விட்டனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை நீக்குவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இப்படி கட்சி நிர்வாகிகளை நீக்கி விட்டு பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பார்கள் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து காதுகுத்து விழா ஒன்றில் மு.க.அழகிரி பங்கேற்றுப் பேசியதாவது:-

குழந்தைக்கு காது குத்துவது எப்படி வேதனையை தருமோ, அதே போல் கட்சியில் இருந்து நீக்கியது நெஞ்சில் வேதனையை ஏற்படுத்தியது. ஒரு ஒன்றியத்தில் குறைகளை கூறி நியாயம் கேட்டேன். உடனடியாக நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இது தலைவருக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை.
FILE

மதுரை உள்பட பல மாவட்டங்களில் கட்சி தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் கூறினேன். பொறுமை காக்கும்படி தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் எழில்மாறன், பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.

இதுபோல் மதுரையில் பல நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். நான் கேட்காமல் கொடுத்த தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை என்னிடம் கேட்காமலேயே எடுத்துக்கொண்டனர் என்று அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!