Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ் வழக்கில் 7 பேர் விடுதலை - அற்புதம்மாள் நெகிழ்ச்சி பெருக்கு!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2014 (14:04 IST)
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
FILE

எனது ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் இத்தனை சீக்கிரமாக முதலமைச்சர் ஜெயலலிதா புரிந்து கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மட்டுமின்றி, ஆயுள் தண்டனை கைதியாக இருந்த நளினி உள்ளிட்ட 4 பேரையுமே விடுதலை செய்து அவர் அறிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவருக்கு எத்தனை முறை நன்றிகள் கூறினாலும் போதாது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது வாழ் நாளிலேயே மகிழ்ச்சியான தருணமாக இதனை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

Show comments