Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிமுக வேட்பாளர் பட்டியல் ரெடி

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2014 (15:47 IST)
பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, போட்டியிடும் தொகுதிகளை மட்டுமின்றி வேட்பாளர்களையும் இறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
FILE

காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் நிபந்தனையின்றி சேருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு முன்னரே பாஜகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமது கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் வைகோ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதில் சில தொகுதிகளை பாமக, பாஜக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதிமுக குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதுடன் வேட்பாளர்களையும் இறுதி செய்து வைத்திருப்பதாக தெரிகிறது.

விருதுநகரில் வைகோ, ஈரோட்டில் கணேசமூர்த்தி இதன்படி விருதுநகரில் வைகோ, தூத்துக்குடியில் ஜோயல், பொள்ளாச்சியில் ஈஸ்வரன், ஈரோட்டில் கணேசமூர்த்தி எம்.பி., காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா, திருச்சியில் திருமதி ரொக்கையா ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

Show comments