Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீண்டாமை சுவரை அகற்றக் கோரி போராட்ட நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2013 (16:43 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற கோரியும், கோவிலை தீட்சிதர்களிடமிருந்து முழுமையாக மீட்க கோரியும் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
FILE


சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாசலில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற கோரியும், நடராஜர் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து முழுமையாக மீட்க கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிதம்பரத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நடராஜர் கோவில் தெற்கு வாசலை முற்றுகையிட சென்றனர். போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாதிவழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

நடராஜர் கோவிலை முற்றுகையிட முயன்ற கோவை ராமகிருஷ்ணன் உள்பட 115 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

Show comments