Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவதாசி முறைக்கு ஆதரவு;சர்ச்சையில் ஸ்வர்ணமால்யா

தேவதாசி முறைக்கு ஆதரவு;சர்ச்சையில் ஸ்வர்ணமால்யா
, திங்கள், 29 ஜூலை 2013 (17:46 IST)
FILE
கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று கல்லூரி விழாவில் தேவதாசிகளுக்கு ஆதரவாக பேசி நடிகையும் நாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை நடத்திய விழாவொன்றில் இரு நாள்களுக்கு முன்பு பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா,

பெண்ணியத்தின் கண்ணியம் தகர்த்த தேவதாசி முறைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று அந்த விழாவில் பேசியுள்ள நடிகை, தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் லாபம் கருதியே தேவதாசி முறையை ஒழித்தனர் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி 'தேவதாசி முறை ஒழிப்பு'க்கு எதிராக வாதித்த

கருத்துகளையும் நினைவு கூர்ந்த ஸ்வர்ணமால்யா, தேவதாசி முறையை மிகவும் மெச்சியபடி கொண்டாடினார். அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு என்றும் தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றும் நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

முன்னதாக "தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்" (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக "பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்" (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்த உதவியதும் மேலாதிக்க சாதி மனப்பான்மையின் கொடூர வடிவாகவும் திகழ்ந்த பெருந்தீமை ஒன்றை ஒரு பெண்ணாக இருக்கும் நடிகையே ஆதரித்து வலியுறுத்திப் பேசியிருப்பதற்கு பெண்ணியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil