Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளவரசன் மனைவி திவ்யா வீடு திரும்பினார்; பலத்த பாதுகாப்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2013 (19:05 IST)
FILE
மரணம் அடைந்த தர்மபுரி இளவரசன் மனைவி திவ்யா, செல்லன்கொட்டாயில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு நேற்று திரும்பினார். இதையடுத்து அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இளவரசன் இறந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரத்தால், திவ்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், செல்லன்கொட்டாயில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது, வீடு பூட்டியிருந்தது. திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தேடப்படுவதையறிந்த திவ்யா தரப்பினர், தங்களது வீட்டிற்கு நேற்றிரவு வந்தனர் என்றும், அவர்களுக்கு கோர்ட் உத்தரவுப்படி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அசம்பாவிதம் எதுவும் நிகழாத வண்ணம், செல்லன்கொட்டாய் கிராமத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் மற்றும் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல, நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் மற்றும் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு கிராமங்களிலும் 70 போலீசார் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர குண்டல்பட்டி அடுத்த செல்லன்கொட்டாய் செல்லும் பிரிவு சாலையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செல்லன்கொட்டாய் கிராமத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக செல்பவர்கள் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். நத்தம் காலனியில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் கோணங்கிநாயக்கன அள்ளி விஏஓ வெங்கடாசலம் தங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, வீட்டை விட்டு வெளியேறிய திவ்யா, மறுநாள் (10 ஆம் தேதி) இளவரசனை திருமணம் செய்துகொண்டார். நீதிமன்றத்தில் இளவரசனை பிரிந்து தாயுடன் செல்வது என முடிவு எடுத்தார். இதற்கு கோர்ட் அனுமதித்தது. கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு, மீண்டும் வீடு திரும்பினார்.

இனி சேர்ந்து வாழப்போவதில்லை என திவ்யா எடுத்த முடிவு தான் இளவரசன் சாவுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இளவரசன் மரணம், திவ்யாவை மனரீதியாக பாதித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதேசமயத்தில் இதுபற்றி எதுவும் அவர் பேச விரும்பவில்லை என அவரது தாய் தேன்மொழி கூறினார். வீட்டின் உள்ளறையில் திவ்யா சோகமே உருவாக அமர்ந்திருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments