Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவ்யாவின் நிலை குறித்து அரசு அறிக்கை- உயர்நீதிமன்றம்

Webdunia
FILE
தருமபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா, சென்னைக்கு வரவும், மன நல ஆலோசனை பெறவும் தயாராக இருக்கிறாரா என்பது குறித்து கேட்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளரும், வழக்குரைஞருமான எஸ். இம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பொது நலன் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், தருமபுரியில் காதல் திருமணம் செய்த கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது மனைவி திவ்யாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம். ஜெயச்சந்திரன், எம்எம். சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழைக்குரைஞர் வைகை ஆஜராகி வாதாடினார். அப்போது, நடந்த சம்பவங்கள் துரதிருஷ்டவசமானது. இந்த நிலையில், திவ்யாவுக்கு இரண்டு ஆபத்து உள்ளது. ஒன்று நடந்த சம்பவங்களுக்கு எல்லாம் தான் தான் காரணம் என்று சுய குற்ற உணர்வினால் தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது அவரை சுற்றி உள்ளவர்கள் தற்கொலைக்குத் தூண்டலாம்.

எனவே இந்த ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும். திவ்யா மற்றும் அவரது தாய், தம்பி ஆகிய மூன்று பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைத்து, மிக விரைவில் அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டாக வேண்டும். அவர்களை உடனடியாக சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில், தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி வாதாடினார். அவர், திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு வர விருப்பம் இருந்தால் மட்டுமே அவர்களை சென்னைக்குக் கொண்டு வர முடியும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள், தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பு மிக்க அதிகாரிகள் கொண்ட குழு உடனடியாக திவ்யா மற்றும் அவரது தாயாரை சந்தித்து அவர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை எடுத்துக் கூறி, அவர்கள் சென்னைக்கு வர தயாராக இருக்கிறார்களா என்பது பற்றி முதலில் அறிய வேண்டும். மேலும், திவ்யா மற்றும் அவர்களது குடும்பத்துக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும்.

திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு வரும் திங்கட்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments