Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளவரசன் அடித்துக் கொலை- திருமா

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2013 (15:26 IST)
FILE
இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இளவரசனின் பெற்றோருக்கும், திவ்யாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்துயுள்ளார்.

இது குறித்து திருமாவளவன் புதுவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தர்மபுரி இளவரசன் சாவில் மர்மம் உள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுள்ளனர். தமிழக அரசு இதுதொடர்பாக பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். 3 மாதத்தில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்பதற்காக இதை திசை திருப்ப முயற்சிக்ககூடாது. தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை எதையும் கேட்க விரும்பவில்லை.

இளவரசனை காதல் திருமணம் செய்துகொண்ட திவ்யா கடைசி வரை அவருடன் சேர்ந்து வாழவே விரும்பி இருக்கிறார். கடந்த 3 ஆம் தேதி அவரை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி இளவரசனுடன் இனி சேர்ந்து வாழ மாட்டேன் என்று பத்திரிகையாளர்களிடம் சொல்ல வைத்துள்ளனர்.

இதற்குப் பிறகும்கூட இளவரசன் மனம் தளரவில்லை. தனது தந்தையிடம் இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றே கூறி இருக்கிறார். இந்த நிலையில் அவர் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் திவ்யா, அவரது தாயார், அவருடைய தம்பி ஆகியோருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. மேலும் இளவரசனின் பெற்றோருக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். இளவரசன் சாவுக்கு பின்னணியில் ஒரு கும்பல் இருந்துள்ளது. அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments