Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் சூ‌ட்கே‌ஸ் - பரபர‌ப்பு

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2013 (17:05 IST)
சென்னை விமான நிலையத்தில் ஒரு பயணி கொண்டுவந்த சூ‌ட்கே‌சி‌ல் 4 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு௦ ‌சி‌றிது நேர‌‌ம் பதற்றம் நிலவியது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணி ஒருவர் வைத்திருந்த சூ‌ட்கே‌ஸை ஸ்கேனர் மூலம் சோதனை செய்த அதிகாரிகள், அ‌தில் 4 துப்பாக்கி தோட்டாக்கள இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அப்பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், தன்னிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த துப்பாக்கி தோட்டாக்களை தவறுதலாக சூ‌ட்கே‌ஸி‌லிருந்து எடுத்து வீட்டில் வைக்க மறந்துவிட்டதாக தெரிவித்தார்.

நீண்ட விசாராணைக்குப் பிறகு அவர் கூறியதெல்லாம் உண்மை என்பதை உணர்ந்து காவல்துறையினர் அவரை விடுவித்து பயணம் செய்ய அனுமதித்தனர். துப்பாக்கி தோட்டாக்கள் அவரை வழியனுப்ப வந்த உறவினர்களிடம் பத்திரமாக கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments