Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவை விசாரிக்க வேண்டும் - வழக்கு!

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2012 (16:08 IST)
இலங்கைக்கு சென்ற இந்திஅய் பாராளுமன்ற குழுவினர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர். இதனையடுத்து எம்.பி.க்கள் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா பற்றி விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இருளாண்டி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு கடந்த 18.4.2012 அன்று இலங்கை சென்றது. இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசியது. அந்த சந்திப்பின்போது இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா உடனிருந்தார்.

இவர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி. எனவே அவரை பற்றிய முழு விவரமும் எம்.பி.க்கள் குழுவுக்கு தெரிந்திருக்ககூடும். எனவே இலங்கை சென்ற சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்களிடம் டக்ளஸ் தேவானந்தாவை பற்றி விசாரிக்க கேட்டு ஏப்ரல் 26-ந்தேதி அன்று உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரிடம் மனு கொடுத்து இருந்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க இந்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஏற்றுக் கொண்ட நீதிபதி டிவிசன் பெஞ்சிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

Show comments