Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்தழுத்த மின்சார‌ம் - மின் வாரிய‌த்து‌‌க்கு நோ‌ட்டீ‌ஸ்

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2012 (11:24 IST)
சென்னையில் நிலவும் குறைந்த அழுத்த மின்சாரத்தால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது பற்றி ப‌தி‌ல் அ‌ளி‌க்க தமிழ்நாடு மின்சார வாரி ய‌த்து‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் எஸ்.விஜய் தாக்கல் செய்த பொது நலன் மனுவில ், சென்னை பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையால் பெரியவர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த மின்னழுத்தம் காரணமாக டி.வி., மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், சலவை எந்திரம், ஏ.சி. இயந்திரம் உள்ளிட்ட விலை உயர்ந்த மின்னணுப் பொருள்கள் பழுதாகின்றன. இதனால் பொருட்செலவு ஏற்படுகிறது. கோடை கால இரவுகளில் தூக்கமின்றி தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் எல்லாருக்குமே மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மின்சார பிரச்சினைகள் பற்றி புகார் கொடுப்பதற்கு தனி போன் எண்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அந்த எண்களை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் தரப்படுவதில்லை. கொடுத்த புகாரின் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிக புகார்கள் வந்தால், செல்போனை `சுவிட்ச் ஆப்' செய்துவிடுகின்றனர். இதனால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முடிவதில்லை.

எனவே, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்சனையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்கு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனுவை ‌‌ விசா‌ரி‌த்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் ‌ பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ல், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் மின்சப்ளை சரிவர இல்லை என்பது மறுப்பதற்கில்லை. சென்னையில் பல இடங்களில் மின்அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இதனால் பல இட ைய ூறுகளை மக்கள் சந்திக்க வேண்டியதுள்ளது.

எனவே இந்த வழக்கில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் (வர்த்தகம்) விளக்கமான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்திலும், சென்னையிலும் மின்சார சப்ளையில் உள்ள தற்போதைய நிலை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனையை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகிய விவரங்களை அதில் அவர் தெரிவிக்க வேண்டும் எ‌ன்று கூ‌றிய ‌நீ‌தி‌ப‌திக‌ள் வழ‌க்கு ‌விசாரணையை ஜ ூலை 3 ஆ‌ம் தேதிக்கு தள்ளிவைத்தனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments