Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ புகழ் லெனின் கருப்பன் கைது

நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ புகழ் லெனின் கருப்பன் கைது
, வியாழன், 15 மார்ச் 2012 (01:41 IST)
FILE
சென்னை: நித்யானந்தா சாமியாரின் முன்னாள் உதவியாளர் லெனின் கருப்பனை சிபி சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

லெனினுக்கு எதிராக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்படுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டு நித்யானந்தா மிரட்டப்பட்டார். இறுதியில் ரூ.45 லட்சத்தை மிரட்டல் விடுத்தவர்கள் பறித்துக் கொண்டனர் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் லெனினின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. அன்று முதல் தலைமறைவாக இருந்து வந்த லெனின் கருப்பன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் இவ்வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Summary: Swamy Nithya Nanda-Actress Ranjitha Sex Video fame Lenin Karuppan is arrested by CBCID police.

Share this Story:

Follow Webdunia tamil