Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால் ஓய்வு பெற முடியவில்லை - கருணா‌நி‌தி வரு‌த்த‌ம்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2012 (09:13 IST)
'' என ் மனைவியரும ் நான ் ஓய்வ ு பெறவேண்டும ் என்றுதான ் விரும்புகின்றனர ்; என்னால்தான ் ஓய்வ ு பெ ற முடியவில்ல ை'' எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி வரு‌த்த‌த்துட‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நடைபெ‌ற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி செ‌ய்‌தியா‌ள‌ர்களு‌க்கு பேட்டி அளித்தார். அப்போது அவ‌ரிட‌ம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்கள ு‌ம்:

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி பொதுக்குழுவிலே சர்ச்சை வந்ததாகச் சொல்லப்படுகிறதே?

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி இங்கே சர்ச்சை வரவில்லை. இந்தப் பொதுக்குழுவில் தலைவர் தேர்தல் நடக்கவும் இல்லை. தலைவர் தேர்தல், தி.மு.கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு, அதைத் தொடர்ந்து கிளைக்கழக தேர்தல்கள், வட்டக் கழக தேர்தல்கள், ஒன்றியக் கழகத் தேர்தல்கள், மாவட்டக் கழகத் தேர்தல்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறக ு, அந்த அமைப்புகளிலிருந்து வருகின்ற பிரதிநிதிகள்தான் பொதுச் செயலாளர், தலைவர் தேர்தலை வாக்களித்து நடத்த வேண்டும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேலாகும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தி.மு. கழகத்தின் சார்பில் ஆங்காங்குள்ள அமைப்புகள் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும். அந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றதற்கான விவரங்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தொலை தொடர்புத்துறை அமை‌ச்ச‌ர் கபில்சிபல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ராசாதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகளை வழங்கினார், அதிலே பிரதமருக்கோ, அப்போதிருந்த நிதி அமைச்சருக்கோ சம்மந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

அப்படி அவர் சொல்லியிருந்தால் அது மறுக்கக் கூடிய ஒன்றாகும். இதே மத்திய அமைச்சர் கபில்சிபல் தொடக்கத்தில ், ம ுன் கூட்டி வருபவர்களுக்கு வழங்குவது என்பது இந்த ஆட்சியிலே அல்ல, கடந்த பா.ஜ.க. ஆட்சியிலே, 2003ஆம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டு விட்டது என்று சொல்லியிருக்கிறார். அதை இப்போது அவரே மாற்றிச் சொல்கிறாரா என்று புரியவில்லை. தவறு செய்திருந்தால், பா.ஜ.க. அமைச்சர்கள் யாராவது அவருடைய இடத்திலே இருந்து செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.

இந்தப் பொதுக்குழுவிலே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி பேசப்பட்டதா?

கூட்டணி பற்றி யாருமே குறிப்பிட்டுப் பேசவில்லை.

காங்கிரஸ் கூட்டணி வேண்டாமென்று இந்தப் பொதுக் குழுவில் யாரோ பேசியதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே, அது உண்மையா?

காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றத் தவறி விட்டது, குறிப்பாக மத்திய சர்க்கார் இலங்கைத் தமிழர்களை கை விட்டுவிட்டது, இங்கேயிருந்து செல்கின்ற மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறி விட்டது, இக்தன்னியில் தமிழகத்திற்குத் தேவையான பல நன்மைகளைச் செய்ய மத்திய அரசு தவறி விட்டது, அத்தகைய மத்திய அரசு இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே இருக்கின்ற காரணத்தால் அவர்களோடு உறவு வேண்டுமா என்ற பிரச்சனையை பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருசிலர் எழுப்பினார்கள்.

அதற்கான விளக்கங்களை நான் அளித்து, நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்கான கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும், அதை மனதிலே வைத்துக்கொண்டு யோசனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இடையிலே நீண்ட காலம் இருக்கிறது. அந்தக் காலம் வரும்போது அதைப்பற்றி பேச்சு வந்தால், அப்போது தி.மு.கழகத்தினுடைய அரசியல் உயர் மட்டக் குழு கலந்து பேசி முடிவினை அறிவிக்கும்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் இப்போது அறிவிக்கப்படுமா?

தேர்தல் ஆணையமே இன்னும் தேதியை அறிவிக்கவில்லை. தேதி குறிப்பிட்டபிறகு அதைப்பற்றி யோசிக்கப்படும்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. அவர் பதவி விலக வேண்டுமென்று பா.ஜ.க. வினர் கேட்கிறார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

நீங்கள் இந்த கேள்வியை தவறான முகவரியிலே கேட்கிறீர்கள்.

காங்கிரசோடு கூட்டணி இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?

இந்தியாவின் முன்னேற்றத்தையும், மதச் சார்பற்ற தன்மையையும் ஏழையெளிய தொழிலாள மக்களுடைய வாழ்வையும் எந்த ஒரு கட்சி மதச்சார்பற்ற முறையில் அணுகுகிறதோ அந்த கட்சியோடு நாங்கள் தொடர்பு கொள்வோம் என்ற எங்களுடைய கருத்தை முன்பே சொல்லியிருக்கிறோம ், இப்போதும் சொல்கிறோம ், அந்த உறுதிப்பாட்டோடு எந்தக் கட்சி எங்களை அணுகினாலும் அதைப்பற்றி ஆராய்வோம், ஆராய்ந்து முடிவெடுப்போம்.

அண்மையில் ஒரு பத்திரிகையில் ஸ்டாலின் அடுத்த தி.மு.க. தலைவராக வரவேண்டுமென்று 58 சதவீதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

என்னுடைய மகனுக்கு அப்படிப்பட்ட ஒரு பெருமை வந்தால் நான் அதை மறுப்பேனா?

அதே சர்வேயில் குறிப்பிட்ட சதவீதம் பேர் நீங்கள் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களே?

அந்தப் பத்திரிகையிலே மாத்திரமல் ல, என்னுடைய மனைவிகள் இருவரும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடியவில்லை எ‌ன்று கருணாநிதி கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments