Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.நக‌ரி‌ல் ‌சீ‌ல் வை‌க்க‌ப்ப‌ட்ட கடைக‌ளை ‌திற‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் 6 வார‌ம் அனும‌தி

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2012 (13:35 IST)
செ‌ன்னை ‌தியாகராய‌ர் ந‌கரி‌ல் ‌சீ‌ல் வை‌க்க‌ப்ப‌ட்ட கடைக‌ளை ‌திற‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ற்கா‌லிகமாக அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

சென்னை தியாகராயநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட் ட க‌ட்டி‌ட‌ங்க‌ளு‌க்க ு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ‌சீ‌ல ் வை‌த்தத ு. இத ை எதிர்த்து வியாபாரிகள் செ‌ன்ன ை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழக்கு தொடரப்பட்டது.

மனுவ ை விசாரித்த நீதிபதிகள், "உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அமைத்து இருக்கும் கண்காணிப்பு குழுவிடம் வியாபாரிகள் தங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம்'' என்று அறிவித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு தாக்கல் செய்தன‌ர ். அ‌தில், "புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகிய காலத்தில் வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது கடைகள் மூடப்பட்டு உள்ளன. எனவே பொங்கல், புத்தாண்டு விற்பனையை கருத்தில் கொண்டு, சீல் வைக்கப்பட்டு இருக்கும் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இந்த மனுவை ‌ இ‌ன்று விசா‌ரி‌த் த நீதிபதிகள் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் கொ‌ண் ட அம‌ர்வு, பொ‌‌ங்க‌ல் ப‌ண்டிகையையொ‌ட்டி கடைகளை 6 வார‌ம் ‌திற‌ந்‌திரு‌க்க த‌ற்கா‌லிகமாக அனும‌தி அ‌ளி‌த்தது.

‌ வியாபா‌ரி‌க‌ளி‌ன் மனுவை ‌விரை‌ந்து முடி‌க்க செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன் ற‌த்து‌க்கு உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், வழ‌க்‌கி‌ன் இறு‌தி உ‌த்தரவை பெற உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுக வே‌ண்டு‌ம் ‌ வியாபா‌ரிகளு‌க்கு அ‌றிவுரை வழ‌ங்‌கின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

அமெரிக்கா செல்ல விமான கட்டணம் திடீர் குறைவு.. டிரம்ப் தான் காரணமா?

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

Show comments