Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு ரயில்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2011 (09:56 IST)
நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல்: இந்த ரயில் (06015) சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை இன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் (06016) மறுமார்க்கத்தில் டிசம்பர் 26-ம் தேதி மதியம் 2.20 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், கோவை வழியாக மறுநாள் காலை 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் - சொரனூர் - சென்னை சென்டரல்: இந்த ரயில் (06017) சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 24-ம் தேதி மற்றும் 31-ம் தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, கோவை வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு சொரனூர் சென்றடையும்.

இந்த ரயில் (06018) மறு மார்க்கத்தில் வரும் டிசம்பர் 25-ம் தேதி மற்றும் ஜவனரி 1-ம் தேதிகளில் சொரனூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அதே வழியாக மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல்: இந்த ரயில் (06019) சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் (06020) மறுமார்க்கத்தில் ஜனவரி 1-ம் தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், கோவை வழியாக மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு டிசம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

Show comments