Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கூ‌ட்ட‌ணியா? த‌னி‌த்தா? இடதுசா‌ரிக‌ள் இ‌ன்று முடிவு

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2011 (08:39 IST)
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என் ப‌தை மார்க்சிஸ்ட ், இ‌ந்‌தியா கம ்ய ூனிஸ்டு கட்ச ிக‌‌ள் இ‌ன்று முடிவு செ‌‌ய்‌கி‌ன்றன.

நட‌ந்து முடி‌ந்த ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌லி‌ல் அ‌.தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி அமை‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட இடதுசா‌ரி க‌ட்‌சிக‌ள், உள்ளாட்சி தேர்தலில் தொகு‌தி ப‌‌ங்‌கீடு கு‌றி‌த்து 4 க‌ட்டமாக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தியது. இத‌ி‌ல் எ‌ந்த‌வித உட‌ன்பாடு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை.

அதே கூ‌ட்ட‌ணி‌‌யி‌ல் இரு‌ந்த அ.‌தி.மு.க.வுட‌ன் பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளாம‌ல் தே.மு.‌தி.க. இரு‌ந்து வ‌ந்த ‌நிலை‌யி‌ல் நே‌ற்று ‌திடீரென உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் வே‌‌ட்பாள‌ர்க‌ள் ப‌ட்டியலை ‌விஜயகா‌ந்‌த் அ‌றி‌வி‌த்து‌வி‌ட்டா‌ர். இதனா‌ல் இடதுசா‌ரி க‌ட்‌சிக‌ள் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தது.

தொகு‌தி உட‌ன்பாடு ‌இழுப‌றி ஏ‌ற்ப‌ட்டு‌‌ம் வேளை‌யி‌ல் இந்திய கம ்ய ூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு. க.வுட‌ன் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ப ேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு நிர்வாகிகள் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள இடங்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய 3 நகராட்சிகளிலும் 20 பேரூராட்சிகளிலும் மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு சார்பில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ண‌ன் கூறுகை‌யி‌ல், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளையும், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் பட்டியலாக கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதாக என்பது குறித்து முடிவு செய்வோம். இது மட்டும் அல்லாமல் தேர்தலில் எப்படி பட்ட அணுகுமுறையை கடைபிடிப்பது என்பது குறித்தும் முடிவு எடுப்போம். செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக எதுவும் கூறமுடியாது எ‌ன்றா‌ர் ராமகிருஷ்ணன ்.

அதேபோல, இந்திய கம ்ய ூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து முடிவு செய்கிறது.

அ.தி.மு.க.வின் மற்ற கூட்டணி கட்சிகளான கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி ஆகியவை நேற்று மாலை அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த 3 கட்சி ‌ நி‌ர்வா‌கிகளு‌ம், பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments