தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகை காந்திமதி சென்னையில் இன்று காலமானார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளர் நடிகை காந்திமதி. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காந்திமதி சென்னை வடபழனியில் உள்ள வீட்டில் இன்று காலமானார்.
நடிகை காந்திமதி மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெற உள்ளதாக அவரது மகன் தீனதயாளன் கூறியுள்ளார்.
300க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை காந்திமதி நடித்துள்ளார்.