Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (14:37 IST)
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இதை விஜய் ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:-

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது. எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிதட்டு மக்களும் சேவை செய்வதற்காக மக்கள் இய்ககம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

Show comments