Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரு‌விழா ச‌ந்தை‌யி‌ல் ரூ.5 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்த கு‌திரை

ஈரோடு ச‌ெ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌‌மி

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2011 (10:22 IST)
webdunia photo
WD
தமிகழம ், கர்நாடகா மக்களிடையே பிரசித்தி பெற்ற ஈரோடு குருநாதசாமி கோவில் தேர் திருவிழா குதிரை சந்தையுடன் தொடங்கியது. இ‌ந்த ச‌ந்தை‌யி‌ல் ஒரு கு‌திரை 5 ல‌ட்ச ரூப‌ா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை‌க்கு வ‌ந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது புதுப்பாளையம். இங்குள்ளது குருநாதசாமி கோவில். இந்த கோவிலில் ஒவ்வ ொரு வருடமும் ஆடி மாதம் இறுதியில் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த விழாவை முன்னிட்டு குதிரை, மாடு, ஆடு போன்ற கால்நடைகள் சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தை தமிழ்நாட ு, கர்நாடகா மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இரு மாநிலங்களில் இருந்து பலவகை குதிரை ரகங்கள் மாட ு, ஆடு ரகங்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்த வருடத்தின் விழா நேற்று மாலை துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக குதிரை சந்தையும் தொடங்கியது.

இந்த சந்தையில் பலவகையான குதிரைகள் விற்பனைக்கு வந்தது. இந்த குதிரைகள் பாட்டிற்கு தகுந்தாற்போல் நடனமாடி பார்வையாளர்களை அசத்தியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்ததை சேர்ந்த இளங்கோ என்பவரது மார்வார் இனத்தை சேர்ந்த முழுவதும் கருப்பு நிறம் கொண்ட குதிரை நடிகர் சூர்யாவுடன் ' ஏழ ாம் அறிவ ு' என்ற படத்தில் நடித்துள்ளது. இந்த குதிரையில் விலை ரூ.5 லட்சமாகும். இதுதவிர லட்சக்கணக்கான விலை கொண்ட குதிரைகள் விற்பனைக்கு வந்தது.

இதேபோல் காங்கயம் காளைகள், குஜராத் மாநிலத்தின் ஜாப்ராபாடி என்ற வகை எருமை, கிர் இன மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிரோகி இன ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதேபோல் இந்த ஆண்டு பூனையும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பெர்சியன்கேர் என்ற இனத்தை சேர்ந்த பூனை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டது. இந்த மாட்டு சந்தை வரு‌ம் 13 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து குதிர ை, ஆடு, மாட்டு ரகங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"புதிய அமைச்சரவை பட்டியல்" - உதயநிதிக்கு 3-வது இடம்.!

நேபாளத்தில் ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சர்ஜரி செய்தபோது பெண்ணின் தலைக்குள் ஊசியை மறந்து வைத்த மருத்துவர்: அதிர்ச்சி தகவல்..!

“தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” - உதயநிதி துணை முதல்வரானது குறித்து இபிஎஸ் கிண்டல்..!

“விஜய் கட்சி கூட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி” - கேள்வி கேட்டதால் தனியறையில் அடைத்த பவுன்சர்கள்.!!

Show comments