Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழின அழிப்பு: வைகோ தயாரித்துள்ள ஆங்கிலக் குறுவட்டு வெளியீடு

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (20:05 IST)
FILE
இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்த சிங்கள இராஜபக்ச ே அரசின் கொடூர முகத்த ை, இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும ், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும ், உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டு வரும்வகையில ், Geneocide of Eelam Tamils : Hearts Blee d என்ற ஆங்கிலக் குற ுவெட ்ட ை வைகோ தயாரித்து உள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் நாள் புதன்கிழமை இரவு 7 மணி அளவில ், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களது இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில ், இந்தக் குறுவெட்டு வெளியிடப்பட்டத ு; திரைகள் அமைத்து ஒளிபரப்பப்பட்டது.

தலைநகர் தில்லியின் நூற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள ், தொலைக்காட்சி ஊடகங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இருந்தனர். ஒரு மணி நேரம் முழுமையாகஅமர்ந்து இருந்த ு, ஈழத்தமிழர் படுகொலைக் காணொளி காட்சிகளைப் பார்த்தனர். லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு உள்ள காணொளிக் காட்சிகளும் இதில் இடம் பெற்று உள்ளன.

‘இந்தக் குறுவெட்ட ு, ஈழத் தமிழர்களின் துன்ப வரலாறைப் படம்பிடித்துக் காட்டுகிறத ு ; இதயத்தைப் பிளக்கின்ற சோகத்தை இந்தக் குறுவெட்டு வெளிப்படுத்துகின்றத ு ; இதனைத் தொகுத்த ு, ஆங்கிலத்தில் உரை ஆக்கம் செய்த ு, குறுவெட்டு நெடுகிலும் தன்னுடைய குரலில் வைகோ பதிவு செய்து இருக்கின்ற விதம ், பார்க்கின்றவர்களின் உள்ளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றத ு’ எனஅனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில ், அ.கணேசமூர்த்தி எம்.பி., ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்தேவதாஸ் ஆகியோர் பங்கு ஏற்றனர்.

இன்ற ு, 4.8.2011 வியாழக்கிழம ை, வைகோவும ், நாடாளுமன்ற உறுப்பினர் கணேமூர்த்தியும ், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வான ி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்க ா, ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌடால ா, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான ், தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌத்ரி ஆகியோரை நேரில் சந்தித்த ு, இந்தக் குறுவெட்டை வழங்கினர்.

இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள ், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் குறுவெட்டு வழங்கப்படுகின்றது. டெல்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் இந்தக் குறுவெட்ட ு, ஈழத் தமிழர்களைக் காக்க முன்வருமாறு வேண்டுகோள் கடிதத்துடன் அனுப்பப்படுகிறது.

உலக நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. ஈழத்தமிழர் இனக்கொல ை; இதயத்தில் இரத்தம ், ஐ.நா. மூவர் குழு அறிக்கை விளக்கம் என ஏற்கனவே வைகோ தமிழில் வெளியிட்ட குறுந்தட்டுகள ், இலட்சக்கணக்கில் தமிழகத்தில் மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டு உள்ளது.

அந்தக் குறுந்தகடுகளை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொடுத்தால ், உலக நாடுகளில் பரப்புரை செய்திட ஏதுவாக இருக்கும் என்ற ு, புலம் பெயர்ந்த தமிழர்கள் வைகோவிடம் கேட்டுக்கொண்டு வந்தனர். அதன்பட ி, வைகோ இந்தக் குறுவெட்டை ஆங்கிலத்தில் தயாரித்து உள்ளார்.

சரியாக ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தக் குறுவெட்ட ு, டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களது இல்லத்திலும ், சென்னையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்திலும் கிடைக்கும் என்று ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments