Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (08:43 IST)
இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ராம ே‌ஸ ்வரம் மீனவர்கள் அறிவித்த ு‌ள்ளன‌ர்.

ராமே‌ஸ ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‌ நிக‌ழ்வை அடு‌‌‌த்து அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு யாகப்பா விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பெஞ்சின்கிளாஸ் தலைமை தாங்கினார். இதில் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட் உள்பட 13 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில ், இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

23 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்யும் வரையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது எ னவு‌ம் ‌தீ‌‌ர்மான‌‌ம் ‌‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்துபோன மீனவர் ஜெரோமியன் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எ‌ன்று‌ம் தீர்மா ன‌ம் நிறைவேற்றப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments