Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆ‌கிறா‌ர் ர‌‌ஜி‌னிகா‌ந்‌த் : கே.எஸ்.ரவிக்குமா‌ர் தகவ‌ல்

Webdunia
சனி, 11 ஜூன் 2011 (10:36 IST)
சிங்கப்பூர் மரு‌த்துவமனை‌யி‌ல் இருந்து நடிகர் ரஜினிகாந்த் 4 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் இய‌க்குன‌ர் கே.எஸ்.ரவிக்க ுமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

உட‌ல் நல‌க்குறைவா‌ல் சிங்கப்பூர் மவு‌ண்‌ட் எ‌லிசபெ‌த் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்த நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சகஜநிலைக்கு திரும்பியது. சாதாரண உணவை சாப்ப ிடுவதோடு மரு‌த்துவமனை வளாகத்தில் ர‌‌ஜி‌னிகா‌ந்‌த் நடைபயிற்சி செய்தார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ரஜினிகாந்த் இன்னும் 4 நாட்களில் சிங்கப்பூர் மரு‌த்துவமனை‌யி‌ல் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். என்றாலும், அவர் சிங்கப்பூரிலேயே சில வாரங்கள் தங்கியிருந்து, உடல் பரிசோதனைக்காக மரு‌த்துவமன ைக்கு சென்று வரவேண்டியதிருக்கும்.

இதற்காக சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்கள். மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் ரஜினியுடன் தங்கியிருப்பார்கள்.

இத‌னிடையே ரஜினிகாந்த் செல்போன் மூலம் சென்னையில் உள்ள இய‌க்குன‌ர் கே.எஸ்.ரவிக்குமாருடன் நே‌ற்று பேச ியு‌ள்ளா‌ர். அ‌ப்போது, மிக விரைவில் மரு‌த்துவமனை‌யி‌ல் இரு‌ந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் தகவலை தெரிவித ்து‌ள்ளா‌ர்.

' ராண ா' படவேலைகள் எந்த நிலையில் உள்ளன என்பது பற்றியும் ர‌விகுமா‌ரிட‌ம் ர‌‌‌ஜி‌னிகா‌ந்‌த் விசாரித ்து‌ள்ளா‌ர ்.

உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் எ‌ன்று‌‌ம் உடல்நிலை முழுமையாக தேறியபின் 'ராணா' படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் எ‌ன்று‌ம் ர‌ஜி‌னி‌‌யிட‌ம் கூ‌றியதாக கே.எஸ்.ரவிக்குமார் த‌ெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments