வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் அதிகாலை 4.15 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 3.15 க்கு, நம் பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார்.
அப்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று பெருமாளை வணங்கினர்.
ஏகாதரசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பில் ஆயிரக்கணக்கானோர் பெருமானை வழிபட்டனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருக்கும்.
இதையொட்டி பல்வேறு பெருமாள் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.