Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்.எ‌ல்.‌சி. பே‌ச்சு தோ‌ல்‌வி: 20வது நா‌ளாக வேலை ‌நிறு‌த்த‌ம் ‌நீடி‌ப்பு

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2010 (12:23 IST)
எ‌ன்எ‌ல்‌சி ஒ‌ப்ப‌‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் தொட‌ர்பாக ‌நி‌ர்வாக‌த்துட‌ன் 10வது முறையாக நடைபெ‌ற்ற பே‌ச்சுவா‌ர்‌த்தை ‌மீ‌ண்டு‌ம் தோ‌ல்‌வி‌‌யி‌ல் முடிவ‌டை‌ந்தது. இதனா‌ல் 20வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ம் தொடரு‌ம் எ‌ன்று தொ‌ழி‌ற்ச‌ங்க‌த்‌தின‌ர் அ‌றிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

ஊ‌திய உய‌ர்வு உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி 13 ஆ‌யிர‌ம் எ‌ன்.எ‌ல்.‌சி ஒ‌ப்ப‌ந்‌த தொ‌ழிலாள‌ர்க‌ள் கட‌ந்த 18ஆ‌ம் தே‌தி முத‌ல் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

வேலை ‌நிறு‌த்த‌த்தை முடிவு‌க்கு கொ‌ண்டு வர மாவ‌ட்ட ‌நி‌ர்வாக‌ம் சா‌ர்‌பி‌ல் நெ‌ய்வே‌லி‌யி‌ல் நே‌‌ற்‌றிரவு 9 ம‌ணி‌க்கு பே‌ச்சுவா‌ர்‌த்தை தொட‌ங்‌கியது.

எ‌ன்.எ‌ல்.‌சி இய‌க்குன‌ர் அ‌ன்சா‌‌‌ரி தலைமை‌யி‌ல் அ‌திகாலை 4 ம‌ணி வரை நடைபெ‌ற்ற பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் எ‌வ்‌வித உட‌ன்பாடு ஏ‌ற்பட‌வி‌ல்லை. ஆனா‌ல் பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் ‌சி‌றித‌ளவு மு‌ன்னே‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக மாவ‌ட்ட ஆ‌ட்‌‌சி‌த் தலைவ‌ர் ‌சீ‌த்தாராம‌‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌ விடிய ‌விடிய நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் உ‌ட‌ன்பாடு எ‌ட்ட மாவ‌ட்ட ‌நி‌ர்வாக‌ம் மே‌ற்கொ‌ண்ட சமரச முய‌ற்‌சி தோ‌ல்‌வி‌யி‌‌ல் முடிவ‌டை‌ந்தது. இதை‌யடு‌த்து வேலை ‌நிறு‌த்த‌ம் தொடரு‌ம் எ‌ன்று ஏ.ஐ.டி.யூ‌.சி உ‌ள்‌ளி‌ட்ட 8 தொ‌‌ழி‌ற்ச‌ங்க‌‌ங்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன.

எ‌ன்எ‌ல்‌சி ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌ம் இ‌ன்று 20வது நாளை எ‌ட்டியு‌ள்ளது. தொட‌ர் வேலை ‌நிறு‌த்த‌த்தை முடிவு‌க்கு கொ‌ண்டுவர மா‌வ‌ட்ட ‌நி‌ர்வாக‌மு‌ம், எ‌‌ன்.எ‌ல்.‌சி ‌நி‌ர்வாகமு‌ம் தொட‌ர்‌ந்து முய‌ற்‌சிபளை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments