Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையமைப்பாளர் சந்திரபோஸ் கவலைக்கிடம்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2010 (09:16 IST)
கல்லீரல ், சிறுநீரக கோளாறு காரணமாக மரு‌த்துவமன ையில் அனுமதிக்கப்பட்ட ு‌ள்ள சினிமா இசையமைப்பாளர் சந்திரபோஸ் கவலைக்கிடம ான ‌நிலை‌யி‌ல் ‌‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

வி.சி.குகநாதன் இ‌ய‌க்‌கிய ' மதுரகீதம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்திரபோஸ். ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

60 வ யதான சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல ், சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக ‌ ச ிகிச்சை பெற்று வந்த அவ‌ர், கடந்த 24 ஆ‌ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத‌்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டார்.

மரு‌த்துவ‌ர்க‌ள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் அவர் நினைவிழந்து, கோமாவில் மூழ்கினார். அவரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி மரு‌த்துவ‌ர்க‌ள் கூறிவிட்டார்கள்.

சந்திரபோசின் வீடு, சென்னை மைலாப்பூரில் உள்ளது. அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்த்தார்கள்.

சந்திரபோசை சிகிச்சைக்காக சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய் த னர். அதன்படி, சந்திரபோஸ் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மரு‌த்துவ‌ர ்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments