Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வாரிய அதிகாரியை எரித்து கொ‌ன்ற பெண் காவல‌ர்

Webdunia
வியாழன், 29 ஜூலை 2010 (13:33 IST)
சென்னையில் மின்வாரிய அதிகாரி ஒருவரை பெ‌ண் காவல‌ர் ஒருவ‌ர் எரித்து கொலை செய ்து‌ள்ள ‌நிக‌‌ழ்வு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் (35) பெருங்குடியில் உள்ள மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த மார்ச் மாதம் 31 ஆ‌ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தாய் செல்லம்மாள் வேளச்சேரி காவ‌ல்துறை‌யி‌ல் புகார் செய்தார். இது பற்றி காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வ‌ந்தன‌ர்.

இதற்கிடையில் ராஜேந்திரனுக்கும், வடபழனி பெண் காவல‌ர் சாஸ்திரகனிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெண் காவல‌‌ர் சாஸ்திரகனி, திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதேபோல காணாமல் போன ராஜேந்திரனும் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் ராஜேந்திரனும், பெண் காவல‌‌ர் சாஸ்திரகனியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்தனர்.

காணாமல் போன ராஜேந்திரன், பெண் காவல‌‌ர் சாஸ்திரகனி வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மின்வாரிய அதிகாரி திடீர் என்று காணாமல் போய் உள்ளார். இது காவ‌ல்துறை அதிகாரிகளுக்கு சாஸ்திரகனி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இத‌‌ற்‌கிடையே காவல‌ர்க‌ள் ந‌‌ண்ப‌ர்க‌ள் குழு‌வி‌ல் உ‌ள்ள ‌வீரராஜனுட‌ன் சா‌ஸ்‌திரக‌னி பழ‌கியதா‌ல் அவரை ராஜே‌ந்‌திர‌ன் க‌ண்டி‌த்ததாகவு‌ம் இதன‌ா‌ல் ஆ‌‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌சா‌ஸ்‌திர‌கனி தமது கூ‌ட்டா‌ளிகளுட‌ன் இணை‌ந்து ராஜே‌ந்‌திரனை ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்‌ட‌ம் கே.கே.ச‌த்‌திர‌ம் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு கட‌த்‌தி எ‌ரி‌த்து கொலை செ‌ய்து ‌வி‌ட்டதாகவு‌ம் கூற‌ப்படு‌கிறது.

இது தொட‌ர்பாக சா‌ஸ்‌திரக‌னி உ‌ள்பட அவரது கூ‌ட்டா‌ளி ‌‌வீரரா‌ஜ‌ன் உ‌ள்பட 4 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். தலைமறைவாக இரு‌க்கு‌ம் மேலு‌ம் 2 பேரை ‌பிடி‌க்க காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர நடவடி‌க்கை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

Show comments